இக்கூட்டத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை அமைதியான மற்றும் சீரிய ஜனநாயக முறையில் நடத்துதல், சட்டம் மற்றும் ஒழுங்கை முழுமையாக பேணுதல் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தேர்தல் காலத்தில் சட்டம்-ஒழுங்கை உறுதிப்படுத்த தனித்தனி கண்காணிப்பு குழுக்கள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கவும், அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் நேர்மையான தேர்தல் நடைபெற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், இந்த முக்கியக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் கோபி, மருதுபாண்டி, பாஜக சார்பில் ரௌத்திரம் சக்திவேல், நாம் தமிழர் கட்சி சார்பில் ரமேஷ், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுவாமிநாதன், கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாராக்கலநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.
அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஒத்துழைப்புடன், மக்கள் நம்பிக்கையை உயர்த்தும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்த உறுதி மேற்கொள்ளப்பட்டது.










Leave a Reply