வேலூர், ஜன. 7-
வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் நா.சே.தலித்பாஸ்கர், மனு அளித்தார். பகுதி செயலாளர் தாலுகா குழு உறுப்பினர், பேரணாம்பட்டு நகரப் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மக்களுக்கு 120 இலவச பட்டா அரவட்லா மலைப் பகுதியில் சர்வே எண் 219,237, 238, ஆகிய எண்களில் உள்ள கல்லாங்குத்து ஆனது என பாறை ஆகிய இடங்களில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். பேரணாம்பட்டு தமிழ்நாடு அரசு பணிமனைக்கு புதிய 10 பேருந்துகள் வழங்கவும், நகரப் பகுதிக்கு போக்குவரத்து காவல் நிலையம் அமைக்கவும், அரசு மருத்துவமனைக்கு மருத்துவர் உதவி பணியாளர்கள் 10 நபர்களை நியமிக்கவும், சாத்கர் ஊராட்சி சேர்ந்த சுமங்கலி தியேட்டர் பின்புறம் சிவராஜ் நகர் பகுதிக்கு சிமெண்ட் சாலை அமைக்கவும் இந்த ஐந்து கோரிக்கைகள் குறித்து மனு அளிக்கப்பட்டது. மேலும் இந்திய தேசிய லீக் மாவட்ட தலைவர் பி. முகமது யூசுப், பேரணாம்பட்டு நகரப் பகுதியில் உள்ள நகராட்சி அருகில் செல்லும் சர்வே எண், 526 மழை நீர் கால்வாய் தூர் வாரவும், நகரப் பகுதியில் மகளிர் காவல் நிலையம் அமைக்கவும், இந்த இரு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தார். அவருடன் இ. அருண்குமார் உடன் இருந்தார்.











Leave a Reply