கர்நாடக மாநிலத்திலிருந்து, பதுக்கி கடத்திவந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த பேரணாம்பட்டு போலீஸார்: வேலூர் எஸ்.பி., மயில்வாகனன் நேரில் பாராட்டு!

வேலூர்,நவ.4-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக பிரபு என்றைக்கு பதவி ஏற்றாரோ அன்றிலிருந்து இன்று வரை பேரணாம்பட்டு நகரத்தில் பெரும்பாலான குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் பிரபு நடவடிக்கை எடுப்பதால் பேரணாம்பட்டு பொதுமக்கள் சற்று நிம்மதியுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் இதற்கு முத்தாய்ப்பு வைத்தார் போல சில தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்திலிருந்து 3360 மது பாக்கெட்டுகள், 65-கிலோ குட்கா, ஆகியவற்றை கடத்தி வந்த இரண்டு கார்களை பத்தலப்பல்லி சோதனைச் சாவடியில் மடக்கிப் பிடித்து இரண்டு கடத்தல்காரர்களை போலீஸார் கைது செய்தார் இன்ஸ்பெக்டர் பிரபு. இதுகுறித்த தகவல் அறிந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் பேரணாம்பட்டு காவல் நிலையத்திற்கு நேரில் வந்து, இரண்டு கார்களில் கடத்தி வரப்பட்ட கர்நாடக மாநில மது பாக்கெட்டுக்களையும், 65 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் தலைமை காவலர் ஆகியோருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்து கௌரவித்தார். இன்ஸ்பெக்டர் பிரபு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பேரணாம்பட்டு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், கோவிந்தன் மற்றும் போலீஸார் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேரணாம்பட்டு பொதுமக்களும், பேரணாம்பட்டு காவல் நிலைய போலீஸாருக்கு தங்களின் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர்.