வேலூர்,டிச.6-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. வேலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயலாளர் வி.டி.சதீஷ் (எ) சத்யாவின் உத்தரவின் பேரில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பேரணாம்பட்டு நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயலாளர் எம். சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை செயலாளர் ஆர். தேவராஜ், நகர இணை செயலாளர் எஸ். திலீப் குமார், பூக்காரர் கரீம் பாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.











Leave a Reply