அரியூர் திருவள்ளுவர் நகரில் புதிய நியாயவிலை கடை திறப்பு விழா !

வேலூர், டிச. 13-
வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியூர் திருவள்ளுவர் நகர் பகுதியில்  புதிய நியாயவிலை கடை திறப்பு விழா நடந்தது. இந்த திறப்பு விழாவில் வேலூர் தெற்கு மாவட்ட செயலாளரும் ,  அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ. பி. நந்தகுமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, பகுதி செயலாளர் ஐயப்பன், மண்டல குழு தலைவர் வெங்கடேசன், அவைத்தலைவர் ரவி, வட்ட செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்