குடியாத்தம் நகரில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தேர்தல் பிரச்சாரம்:  விவசாய சின்னத்தில் வாக்களிக்க ஓட்டு வேட்டை!

வேலூர், மார்ச் 25-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்  பொதுமக்கள் மத்தியில் பேசி ஓட்டு வேட்டையாடினார். சீமான் பேசும் போது கூறியதாவது: வரும் தேர்தல்  பிரச்சாரத்தில் திமுக, மற்றும் அதிமுகவினர் பொய் பிரச்சாரங்கள் கூறியும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பணம் கொடுத்தும் பொதுமக்களை விலைக்கு வாங்கலாம் என்ற நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பொதுமக்கள் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடாதீர்கள். இதுகுறித்தும் விழிப்புணர்வோடு சிந்தித்து வாக்களியுங்கள் என்றும் கூறினார். இந்த பிரச்சார கூட்டத்தில் குடியாத்தம் வேட்பாளர் ஆசிரியர் இமலன் மற்றும் கே.வி.குப்பம் வேட்பாளர் வழக்கறிஞர் கலையேந்தி ஆகிய இருவரையும் ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது கூட்டத்தில் உடன் இருந்த அக்கட்சியின் நிர்வாகிகள்
ஐ. மேனகா, மாநில ஒருங்கிணைப்பாளர்
சு.அர்ஜூன் ,மாநில ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்ப பாசறை
பி கோபி கிருஷ்ணா, மாநில ஒருங்கிணைப்பாளர்
சு. ஐயப்பன், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
கீழ் முட்டுக்கூர் தேவேந்திரன், மாவட்ட செயலாளர்
மா. ரவி, மாவட்ட தலைவர் உள்ளிட்ட பலர் மற்றும் இந்த பிரச்சார கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கூட்ய கலந்து கொண்டனர்