சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி இ.மேட்டுக்காடு வண்ணான்குட்டை முனியப்பன் கோவில் அருகிலுள்ள அருள்மிகு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் நூதன ஆலய மஹா கும்பாபிஷேக விழா நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.



இதையொட்டி இன்று காலை கஞ்சமலை சித்தேஸ்வரர் ஆலயத்திலிருந்து புனித தீர்த்தக் குடங்கள் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீரை ஏந்தி வந்தனர். நாளை காலை முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் இப்பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.










Leave a Reply