முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்”;; மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா அவர்கள் தலைமையில் இன்று (13.02.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களிடமிருந்து அவர்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் கேட்கப்பட்டதுடன் அவர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 11 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொடர்ந்து, முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 17 நபர்களுக்கு ரூ.5,94,000 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா அவர்கள் வழங்கினார்.