காட்பாடி அருகே காட்டு யானைகள் அட்டகாசம் – வனத்துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!

வேலூர், மார்ச் 22-
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகிலுள்ள வண்டறந்தாங்கல் உள்ளிட்ட கிராமங்களில் காட்டு யானைகள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து காட்டு யானைகள் கூட்டமாக தமிழ்நாடு எல்லையில் நுழைந்து
வாழைமரங்களை முற்றிலும் சாய்த்து அழித்து வருகிறது.
தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்துள்ளன.
போர்வெல் மோட்டார்களை சேதப்படுத்தியுள்ளன.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெட்டிவேர் செடிகளை நாசம் செய்துள்ளன.
இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இரவு நேரங்களில் யானைகள் வருவதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை:
காட்டு யானைகளை உடனடியாக பிடித்து பாதுகாப்பான காட்டு பகுதிக்கு மாற்ற வேண்டும்.
வனத்துறை தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். யானைகள் கிராமப்புறங்களுக்கு வராமல் தடுக்கும் நிரந்தர தீர்வு ஏற்படுத்திட வேண்டும்.
இந்த நிலையில், வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்பையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து வண்டறந்தாங்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் யானைகள் இரவு நேரத்தில் நடமாடுவதை தடுக்கும் வகையில் நிரந்தர வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விலைமதிப்பில்லாத மனித உயிர்கள் ஏதாவது மாண்டு போவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று கிராம மக்களும் ,விவசாயிகளும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இனி அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை நாம்  தெரிந்து கொள்ள பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.