குடியாத்தம் ஒன்றிய அதிமுக இளைஞரணி அறிவரசு பிறந்தநாள் விழா கோலாகலம்!

வேலூர், மார்ச் 21-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றிய அதிமுக இளைஞரணியைச் சேர்ந்த அறிவரசு பிறந்த நாளை முன்னிட்டு, ஒன்றிய செயலாளர் டி. சிவா சால்வை அணிவித்து கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தார். இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் புதிய நீதி கட்சியின் குடியாத்தம் நகரச் செயலாளர், கைத்தறி காவலன், தொழிலதிபர் எஸ்.ரமேஷ், மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.பி.நந்தகுமார், நகர துணை செயலாளர் செல்வம் மற்றும் அதிமுக ஒன்றிய பொறுப்பாளர்கள் மீனூர் கோதண்டன், தட்டப்பாறை உலகநாதன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.