வேலூர் திருப்பதி  தேவஸ்தான தகவல் மையத்தில் யுகாதியை முன்னிட்டு அதிமுக அன்னதானம் வழங்கல்!

வேலூர், மார்ச் 20-
யுகாதி திருநாளை முன்னிட்டு வேலூர் திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருநாளை முன்னிட்டு வேலூரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மலர்களால் மலையப்ப சுவாமி அலங்கரிக்கப்பட்டார் .அதை தொடர்ந்து சிறப்பு விசேஷ வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாளை தரிசனம் செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ். ஆர். கே. அப்பு தலைமையில் சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர்  எஸ். ஆர். கே. .அப்புவுடன், வேலூர் ஸ்ரீ புரம் நாராயணி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பாலாஜி இணைந்து அன்னதானம் வழங்கினார். இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் வண்டறந்தாங்கல் கிராம ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ், வேலூர் வழக்கறிஞர் பாலச்சந்தர் மற்றும் 7ஜி முரளிதரன் மற்றும் பல அதிமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.