வேலூர்,மார்ச் 20-
வேலூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க, தொடர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.யூ. சிவராமன் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபரான அரியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏரியூர் பகுதியைச் சேர்ந்த பூர்ணச்சந்திரன் (25), த/ பெ. கணேஷ் பாபு, அரியூர் என்பவரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் ,குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து
மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்புலெட்சுமி, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு ஆணையை பிறப்பித்தார். மேற்படி ஆணையை அரியூர் காவல் ஆய்வாளர் த.நாகராஜன் 18.03.2026 -ம் தேதி வேலூர் மத்திய சிறைச்சாலையில் சார்வு செய்யப்பட்டது.
மேலும், இதுபோன்ற தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார் என்பதை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.











Leave a Reply