கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு வாகன பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர் நிலையான கண்காணிப்பு குழுவில் தேர்தல் அலுவலர், காவலர்கள், மத்திய பாதுகாப்பு படை மற்றும் பதிவேற்றும் புகைப்பட நிபுணர்கள் பணியில் உள்ளனர்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் (Model Code of Conduct) என்பது தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் அரசு கடைபிடிக்க வேண்டிய, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட கட்டாய விதிமுறைகளாகும். நியாயமான, அமைதியான மற்றும் சுதந்திரமான தேர்தலை உறுதி செய்ய விதிமுறைகள் பயன்பாட்டில் உள்ளது