கே.வி.குப்பத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா!

வேலூர்,மார்ச் 15-
வேலூர் மாவட்டம்,
கே.வி.குப்பம் வட்டாரத்திற்கான மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர்
நீதிமன்றம் சென்னங்குப்பம் புதூர் பகுதியில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர்.
ஜி. ஜெயச்சந்திரன் முன்னிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும்
வேலூர் மாவட்ட நிர்வாக
நீதிபதி கே.முரளிசங்கர்  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து,
அப்பகுதியிலுள்ள வித்தியாலட்சுமி பள்ளி அரங்கில், நீதிமன்றத்திற்கான கல்வெட்டை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில்,முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி எம்.இளவரசன்,
மாவட்ட. ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
ந.உ.சிவராமன்,
தலைமை நீதித்துறை நடுவர்.ஜி.இசக்கியப்பன்,
காட்பாடி பார் அசோசியேஷன்
தவைவர்.டி.முனிசாமி, காட்பாடி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்
பி.திருஞானம், குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி,
வட்டாட்சியர் பலராமன்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள்,
வழக்கறிஞர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், து.தலைவர்கள், கவுன்சிலர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.