வேலூர், மார்ச் 14-
திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்துக்களுடன், வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, வேலூர் ஒன்றியம், சதுப்பேரி ஊராட்சியில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் படகு குழாம் மற்றும் சுற்றுலா மையம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ. பி. நந்தகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன், மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.















Leave a Reply