அணைக்கட்டு மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத் திறப்பு விழா!

வேலூர், மார்ச் 11-
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு மேற்கு ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
அணைக்கட்டு  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் ஒடுகத்தூர்  சாலையில் உள்ள பூஞ்சோலை கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. மேற்கு ஒன்றிய செயலாளர் மகாதேவன், மேற்கு ஒன்றிய  பொருளாளர் விக்ரம் ரவி
தலைமையில்  நடைபெற்ற இவ்விழாவில்  அணைக்கட்டு தொகுதி மாவட்ட செயலாளர் கோட்டி என்கின்ற கோவேந்தன் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மேலும் தலைமை நிலைய செயலாளர் இளம் சேகுவாரா ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்து ஒன்றிய நிர்வாகிகளை வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் துணைச் செயலாளர்கள் சுரேஷ், பிரபு, பிரபா உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்