கோவையில் கடந்த மூன்று வருடங்களாக மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஒருவர் மின்வாரிய குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் தற்போது பதவி உயர்வு பெற்று சென்னைக்கு சென்று விட்டார் இவர் குடியிருந்த இந்த மூன்று வருடங்களில் ஒரு தடவை கூட குடியிருப்பு வாடகை கட்டவில்லை இதை கணக்கு வழக்க பிரிவு அலுவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அவரது சம்பளத்தில் இருந்து சுமார் ரூபாய் 2,92,694 தொகையை பிடித்தம் செய்யக்கோரி அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது ஆனால் அந்த அதிகாரி தனக்கு வந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு தான் வேலை பார்த்த காலகட்டங்களில் சிறப்பாக பணியாற்றியதாகவும் அதே வேலையில் நேர்மையாக நடந்து கொண்டதாகவும் அதனை கருத்தில் கொண்டு வாடகை தொகையை பிடித்தம் செய்யக்கோரி வந்த அறிவிப்பினை ரத்து செய்யக்கோரி மின்வாரிய தலைவருக்கு மனு அளித்ததின் அடிப்படையில் மின்வாரிய தலைவர் ரத்து செய்துவிட்டார் இதே போல் ஒவ்வொரு அதிகாரியும் மின்வாரிய குடியிருப்பில் குடியிருந்து கொண்டு வாடகை செலுத்தாமல் வசித்து வந்தால் மின்வாரியம் கடைசி வரை கடனில் மட்டுமே காலத்தை தள்ள வேண்டிய சூழ்நிலை நேர்ந்து விடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்…












Leave a Reply