வேலூர், மார்ச் 9-
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் வடக்கு மாவட்டம், காட்பாடி 7வது வார்டில் 500 தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மார்ச் 8ஆம் தேதி நடைபெற்றது. காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இவ்விழாவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி. எம். கதிர் ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சியின் துணை மேயரும், தெற்கு பகுதி செயலாளருமான சுனில் குமார், வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் டீட்டா சரவணன், காட்பாடி 1வது மண்டல குழு தலைவி புஷ்பலதா வன்னிய ராஜா மற்றும் பல திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.











Leave a Reply