செய்யாறு, மார்ச் 8 –
தேர்தல் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளன. வந்தவாசி – செய்யாறு சட்டசபை தொகுதிகளை கைப்பற்றியே ஆக வேண்டும் என, செய்யார் அடுத்த மேல்மா பகுதியில் அ.தி.மு.க.,வின் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
செய்யாறு அடுத்த மேல்மா பகுதியில் அ.தி.மு.க., சார்பில் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமைத் தாங்கினர். கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் பேசியதாவது; ‘சட்டசபை தேர்தல் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளன. அதற்கிடையில் புதிய வாக்காளர் பட்டியலை பொறுப்பாளர்கள் ஒவ்வொரு பகுதியாக எடுத்துச் சென்று விடுபட்டவர்களின் பெயர்களை சேர்க்க வேண்டும். இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதா என, வீடு வீடாகச் சென்று சரிபார்க்கும் பணியை செய்ய வேண்டும். இதுவரையில் வந்தவாசி – செய்யாறு தொகுதிகளில் அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்பட்டு தேர்தலுக்கு தயார் நிலையில் உள்ளோம். என்ன மேலிடமே கூறியுள்ளது. அதே வேளையில் தேர்தல் தேதி அறிவித்தவுடன் 40 நாட்களுக்கு நாம் தொடர்ந்து பணியாற்றினால், இரண்டு தொகுதிகளையும் நாம் கைப்பற்றி விடலாம். தொகுதியை கூட்டணிக்கு அறிவித்தாலும் – நம்மில் ஒருவரை ‘களத்தில்’ இறங்கினாலும் முழு மனதோடு பணியாற்ற வேண்டும், ‘இவ்வாறு தூசி மோகன் பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜாஹிர் உசேன், பாஸ்கர் ரெட்டி, விமலா மகேந்திரன், ஆலத்தூர் சுப்புராயன், திருமூலன், பாராசூர் பெருமாள், நகர செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.












Leave a Reply