வேலூர் அகரம்சேரிக்கு 23ம் தேதி வருகிறார் தவெக தலைவர் விஜய் ஜோசப்!

வேலூர், பிப். 20-
த.வெ.க.தலைவர் விஜய் ஜோசப் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்காக பந்தல் கால் நடப்பட்டது.
   வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரியில்  சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பள்ளிக்குப்பம்  பகுதியில்  தவெக விஜய்ஜோசப் மக்கள் சந்திப்புக்கூட்டம் நடத்துவதற்காக ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகிறது.
அதற்கான இடம்  தேர்வு செய்யப்பட்டு 33 ஏக்கர்  நிலத்தை சமன் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அதிகாலை 4 மணியளவில் பிரம்ம முகூர்த்தத்தில் சிறப்பு  பூஜைகள் செய்து பந்தல் கால் நடப்பட்டது.
தவெக மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய தொகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.”காவல் துறை அனுமதி பெற்று இந்த விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.