வேலூர், பிப். 17-
வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் ஸ்ரீ மார்க்கபந்தீஸ்வரர் ஆலயத்தில் கடந்த 15ஆம் தேதி இரவு மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் காட்பாடி ஆருத்ரா நாட்டியாலயா பள்ளியில் பயிலும் சிறுமிகள் மற்றும் மாணவ, மாணவிகள் நாட்டியாஞ்சலி விழாவில் கலந்துகொண்டு தங்களது தனித்திறமையை வெளிக்கொண்டு வந்தனர். அவர்களது நாட்டிய திறமையை, அபிநயத்தை கவனித்து நடுவர் குழு ஆருத்ரா நாட்டியாலயா பள்ளியைச் சேர்ந்த சிறுமிக்கு பரிசளித்து சான்றிதழ்களையும் அளித்து பாராட்டி கௌரவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.













Leave a Reply