செய்யாறில் அரசு கலைக்கல்லூரி விரிவுரையாளர்களின் போராட்டத்திற்கு புரட்சி பாரதம் கட்சி நேரில் சென்று ஆதரவு !

செய்யாறு, பிப். 17 –
செய்யாறு அரசு கலைக் கல்லூரி விரிவுரையாளர்களின் தொடர் போராட்டத்திற்கு, புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாவட்ட செயலாளர் எ.காளிதாசன் தலைமையில் பொறுப்பாளர்கள் நேற்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் விரிவுரையாளர்கள் கடந்த 15 நாட்களுக்கு மேலாக 5 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டம் நேற்றும் நடந்தது.
கல்லூரியின் நுழைவு வாயிலில் நடத்தி வரும் இவர்களது போராட்டத்தை  புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் அரிவிடைதாங்கி
அ.காளிதாஸ் தலைமையில்,  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஸ்ரீதர், மாவட்ட இணை செயலாளர் மு.பாரதி மற்றும் பொறுப்பாளர்கள்,  நகர – கிளை கழக நிர்வாகிகள் என 20க்கும் மேற்பட்டோர் விரிவுரையாளர்களை நேரில் சந்தித்து, உங்களது போராட்டம் வெற்றி பெறும் என நேற்று ஆறுதல் கூறினர். உங்களது போராட்டம் குறித்து புரட்சி பாரதம் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ருசேந்திரன் மூலம் சட்டசபையில் பேசி – உங்களது கோரிக்கைகளை முன் வைக்கிறோம் என உறுதியளித்தனர். இதற்கு விரிவுரையாளர்களும் புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த அனைவருக்கும் தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர்.