காட்பாடியில் வேலூர் வடக்கு மாவட்ட திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு: அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு!

வேலூர் மார்ச் 26-
வேலூர் மாவட்டம், காட்பாடியில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் வடக்கு மாவட்ட திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இந்த திமுக தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் வேலூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், வேலூர் தொகுதி எம்.பி.யுமான கதிர் ஆனந்த், வேலூர் தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன், மாவட்ட பொருளாளர் நரசிம்மன், வேலூர் மாநகராட்சி துணை மேயரும், தெற்கு பகுதி செயலாளருமான சுனில் குமார், வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா ,வேலூர் மாநகராட்சி 1வது வார்டு கவுன்சிலர் அன்பு, வட்டச் செயலாளர் லோகநாதன், காட்பாடி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் திருவலம் சரவணன், முன்னாள் எம்எல்ஏ லதா மற்றும் முன்னாள் கவுன்சிலர் ஜெய்சங்கர் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்