வேலூர்,ஜன.4-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகர திமுக ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளராக பேரணாம்பட்டு பாகர்ஹூசேன் விதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குநர் ஜி. தவீந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வேலூர் மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஏ.பி.
நந்தகுமார், குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி. அமுலு விஜயன், பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் வி .பிரேமா வெற்றிவேல், நகர திமுக செயலாளரும், நகர மன்ற துணைத் தலைவருமான ஆழியார் ஜூபேர் அஹமத், வேலூர் மாவட்ட திமுக துணை செயலாளர் எம். பிரபாத் குமார், முன்னாள் நகர மன்ற உறுப்பினரும், நகர திமுக துணை செயலாளருமான பி. சின்னா (எ) பொற்கைபாண்டியன், மூத்த நகரமன்ற உறுப்பினர் டி .அப்துல் ஜமீல், ஆழியார் அர்ஷத் அஹமத் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.











Leave a Reply