கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு பாராட்டு….
கோவை மசக்காளிபாளையம் லால் பகதூர் நகரில் புதிய டிரான்ஸ்பார்மர் மின்வாரியம் நடவடிக்கை இது தொடர்பான விவரம் வருமாறு:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மாநகர் வட்டம் நகரிய கோட்டம் பீளமேடு கிழக்குப் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட மசுக்காளிபாளையம் சாலை லால் பகதூர் நகர் சின்னச்சாமி நிலையம் பாலன் நகர் ஆகிய பகுதிகளில் அங்குள்ள 250 கிலோ வாட் திறன் கொண்ட மின்மாற்றி மூலம் மின் இணைப்பு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் லால் பகதூர் நகரில் வணிக வளாகம், தங்கும் விடுதிகள் உருவாகியதால் ஏற்கனவே இருந்த மின்மாற்றியில் கூடுதல் மின் பழுது காரணமாக கடந்த வருடத்திற்கு மேலாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது.
குறிப்பாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இது குறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா. லோகு கோவை மண்டல தலைமைப் பொறியாளருக்கு எழுதிய கடிதத்தில் மசுக்காளிபாளையம் லால் பகதூர் நகரில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் இப்பகுதியில் வணிக வளாகம் மற்றும் தங்கும் விடுதிகள் அதிகரித்து வருவதால் புதிய மின்மாற்றி அமைத்து மின் தடை ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில் லால் பகதூர் நகரில் 100 கிலோ வாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டால் அடிக்கடி மின்தடை ஏற்படாது என்று மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர். லால் பகதூர் நகரில் மின்தடையை சரி செய்ய புதிய மின் மாற்றி அமைக்க கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா லோகு விடுத்த கோரிக்கையை ஏற்று புதிய மின் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுத்த மின்வாரியத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.













Leave a Reply