நஞ்சுண்டாபுரம்ஊராட்சியில்ரூ. 2லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு!நடவடிக்கை எடுப்பதுயார்?

 கோவை வடக்கு பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் 22 நஞ்சுண்டாபுரம் ஊராட்சி பகுதியில் சோமையனூர் பொதுக் குடிநீர் மேல்நிலை தேக்கத் தொட்டியில் பாதுகாப்பாக கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக இருந்த ஒரு 10ஹெச்பி மோட்டார், 6 குப்பை வண்டிகள், நீர்த்தேக்கத் தொட்டிக்கு பயன்படுத்திய ஒரு ஏணி மற்றும் ஒரு மோட்டார் பெட் ஆகிய ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை இரும்புக் கடையில் எடைக்குப் போட்டு விட்டதாக முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் சி. சோமசுந்தரம் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  மேற்படி நபர் இரண்டு வாட்டர் மேன்கள் உள்ளதாக கணக்கு காட்டி  இருவர் சம்பளத்தையும் பெற்றுக் கொள்கிறாராம். பொதுவாக அரசுக்கு சொந்தமான பொருட்களை விற்க வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதை டெண்டர்  விட வேண்டும். பிறகு தான் விற்பனை செய்ய முடியும். இந்த விதிமுறையை மீறி நடந்த திருட்டு சம்பவம் செய்த  நபர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயுமா? மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பாரா? என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

     விரிவான தகவல் பவர் நியூஸ் இதழில்….