
ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் நாகநாதன் இன்று நுங்கம்பாக்கம் 113 -வது வார்டில் உள்ள ஷெனாய் ரோடு, தெய்வநாயகம் தெரு நான்கு மாட வீதி, மேல்பாடி முத்துத் தெரு, கிருஷ்ணமா தெரு, குமரப்பா தெரு, மாங்காடு தெரு, ராமா தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் ஆய்வு செய்து பொது மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.
உடன் மாநகராட்சி அதிகாரிகள், மெட்ரோ வாட்டர் வாரிய அதிகாரிகள், மின்சார வாரிய அதிகாரிகள் வருகை தந்து இருந்தனர்.
பொது மக்கள் அளித்த புகார்களை கேட்டு உடனடியாக தீர்க்கக் கூடிய பிரச்சனைகளை சீர் செய்து தர உத்தரவிட்டார்.
சிங்கார சென்னை ரங்கநாதன் சில குறைகளை சுட்டி காட்டி நிரந்தர தீர்வு காண வேண்டுகோல் வைத்தார்.
உடன் தி.மு.கழக நிர்வாகி வட்ட செயலாளர் மகேஷ் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.












Leave a Reply