இறைவன்காடு ஏரியில் நீர் கோடி போவதை மலர் தூவி வரவேற்ற  எம்எல்ஏ நந்தகுமார்!

வேலூர், அக். 26-
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, கிழக்கு ஒன்றியம், இறைவன்காடு ஊராட்சி  கிராமத்தில் உள்ள ஏரியில் நீர் கோடி போவதை திமுக வேலூர் மாவட்ட செயலாளரும்,  அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஏ. பி. நந்தகுமார் மலர் தூவி வரவேற்றார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார். இந்த எளிய நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.குமாரபாண்டியன், மத்திய ஒன்றிய செயலாளர் பி.வெங்கடேசன், அரசு அதிகாரிகள், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், திமுக தோழர்கள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.