வேலூரில் ரூ. 32 கோடி் மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா திறப்பு!

வேலூர், நவ. 6-
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை, அரசு தலைமைச் செயலகத்தில் (05.11.2025) புதன்கிழமை காலை 10.15 மணியளவில்
காணொலிக் காட்சி வாயிலாக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் வேலூரில் 32 கோடி ரூபாய் செலவில் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வேலூர் மினி டைடல் பூங்காவினை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து,
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, வேலூர் ஒன்றியம், மேல்மொணவூர் அப்துல்லாபுரம் பகுதிகளில் உள்ள
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், வேலூரில் 32 கோடி ரூபாய் செலவில் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வேலூர் மினி டைடல் பூங்கா  திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் வேலூர் சுப்புலட்சுமி  தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ., ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார். இதில் வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, மாநகராட்சி மேயர் சுஜாதா, வேலூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அமுதா ஞானசேகரன்,  துணை மேயர் எம்..சுனில்குமார், ஒன்றிய செயலாளர் சி. எல்.ஞானசேகரன், ஒன்றிய குழு பெருந்தலைவர் சி.பாஸ்கரன்,  மாவட்ட ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் ஜே.திவாகர், கிளை செயலாளர் பச்சையப்பன் மற்றும் பல்டடவேறு அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.