மேட்டுப்பாளையம் அரசுமருத்துவமனையில் கல்லூரி மாணவ மாணவிகள் பொது தொழிலாளர்கள்சங்கத்தினர் இணைந்து தூய்மை பணி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்
உள்ள குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவ, மாணவிகள் மற்றும் மேட்டுப்பாளையம் பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த
குப்பைகள், பிளாஸ்டிக் பொருள்கள், தேவையற்ற செடி, கொடிகளைஅகற்றி சுத்தம் செய்தனா்.
இந்த
நிகழ்ச்சிக்கு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள்
தலைமை வகித்தனர்
தூய்மை பணியை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜா துவக்கி வைத்து மாணவ மாணவியரிடையே சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்
குமரன் கலை அறிவியல் கல்லூரி
பிரின்ஸ்பால்ரம்யா .
நாட்டு நலப் பணிகள் சம்பந்தமாக மாணவ மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
குழந்தைகள் நல மருத்துவர் விஜய் மேட்டுப்பாளையம் திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் அஷ்ரப் அலி மாணவ மாணவிகளுக்கும் பொதுச் செயலாளர் சங்கத்தினருக்கும் சான்றிதழ் வழங்கினார்கள்
இந்த நிகழ்ச்சியை கல்லூரி பேராசிரியர்
சுகுணா.
அரசு மருத்துவமனை தலைமை செவிலியர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது
அங்கு சேகரிக்கப்பட்ட குப்பையை மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தினர் வாகனத்தில் எடுத்துச் சென்றனர் இந்தத் தூய்மை பணி நிகழ்ச்சி
அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தவர்களுக்கு விழிப்புணர்வையும் நெகிழ்ச்சியும் ஏற்படுத்தியது