மேட்டுப்பாளையம்அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில்
தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா
கல்லூரிக் கருத்தரங்கக் கூடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் காரமடை நகர்மன்றத் தலைவர் உஷா வெங்கடேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ மாணவியருக்கு மடிக்கணினி வழங்கிச் சிறப்பித்தனர் இந்நிகழ்வில் காரமடை நகர்மன்ற உறுப்பினர்கள் குருபிரசாத், ராமமூர்த்தி, ரவிக்குமார், மஞ்சுளாதேவி ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் க.ஆ. ஜெயசங்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழவிற்கு வருகைபுரிந்த அனைவரையும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மோ. செந்தில்குமார் வரவேற்றார்.
நிகழ்ச்சியின் நிறைவாக கல்லூரி நூலகர் பொ. ராஜ்குமார் அவர்கள் நன்றிகூற விழா இனிதே நிறைவுற்றது.