மேட்டுப்பாளையம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
மேட்டுப்பாளையம் மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசு கலைஅறிவியல் கல்லூரியில் புதியதாக
11 வகுப்பறைகள் அடிக்கல் நாட்டுவிழா
தமிழ்நாடு அரசு உயல்கல்வித் துறையின் பெருந்தலைவர் காமராஜர் திட்டத்தின்கீழ் ரூ.4,72,50000 மதிப்பீட்டில் 11 வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றதுமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்மு .க . ஸ்டாலின் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டிச் சிறப்பித்தார். அதன்பொருட்டு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழாவில் காரமடை நகர்மன்றத் தலைவர் உஷா வெங்கடேஷ் அவர்களும் துணைத்தலைவர் மல்லிகா ஜெயபிரகாஷ் அவர்களும் நகர்மன்ற உறுப்பினர் குருபிரசாத் அவர்களும் மேட்டுப்பாளையம் நகர்மன்றத் துணைத்தலைவர் அருள்வடிவு அவர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப. அருண் குமார் அவர்களும் மற்றும் காரமடை நகர்மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்கல்லூரி முதல்வர் முனைவர் அ. மாரிமுத்து அவர்களும் ஆசிரியர்களும் இவ்விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். கல்லூரி ஆசிரியர்களும் அலுவலர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்…











Leave a Reply