மெட்டுக்குளம் ஊராட்சி கஞ்சாலூரில் கிராம சபை கூட்டம்!

வேலூர்,ஜன.27-
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், மெட்டுக்குளம் ஊராட்சி கஞ்சாலூரில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அனிதா இளங்கோவன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் சரவணன் தீர்மானங்களை வாசித்தார். தொடர்ந்து கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், 100 நாள் வேலை திட்டம் 125 நாட்களாக மாற்றப்பட்டது குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார். குறிப்பாக கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தருவதாக உறுதி கூறப்பட்டது. கூட்டத்தில் தேசிய உறுதி மொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து அனைவருக்கும் தேநீர் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கூட்டம் நிறைவு பெற்றதும் அனைவருக்கும் மதியம் அறுசுவை உணவு விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.