வேலூரில் ஓடும் ரயிலில் பெண்ணை தள்ளி விட்டவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை!

வேலூர், நவ.26 –
வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமராஜ் (25 ).இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு காட்பாடி ஜாப்ராபேட்டை அருகே ஓடும் ரயிலில் இருந்து 24 வயதுள்ள இளம்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டார். இந்த வழக்கு வேலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் காமராஜூக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் ஹேமராஜூவுக்கு வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில் காவலில் அடைக்கப்பட்டார்.