வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மதிய உணவு வழங்கல்!

வேலூர்,நவ.19-
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஏழை, எளியவர்களுக்கு மதிய உணவு  வழங்கப்பட்டது.
கடந்த 2019ம் ஆண்டு கொரானா ஊரடங்கு காலத்தில் இருந்து அன்று முதல் தொடர்ந்து இன்று வரை வேலூர் மாவட்ட திமுக  அலுவலகத்தில், ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் வகையில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. திமுக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் தனது சொந்த செலவில் இருந்து வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு அன்று முதல் இன்று வரை இடைவகடாது மதிய உணவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.