
கோவை விளாங்குறிச்சி சாலை ராமகிருஷ்ணா பால் டேங்க் அருகில் கடை எண்: 1597 அரசு குறிப்பிட்டுள்ள விற்பனை நேரத்திற்கு முன்னதாகவே பார் திறந்து வைத்து மது அருந்துவோரைக் கவர்கின்றனர். வெகு ஜோராக விற்பனை நடைபெற்று கல்லா கட்டுகின்றனர்.
இப்படி ஏன் விற்பனை நேரத்திற்கு முன்னதாக பாரை திறந்து வைத்திருக்கிறீர்கள்? என்று அதன் உரிமையாளர் கிஷோரிடம் கேட்டால் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தெரிந்து தான் இது நடக்கிறது என்று ஏகத்தாளமாக பேசுகிறாராம். பார் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயுமா? என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.











Leave a Reply