

வேலூர், டிச. 18-
வேலூர் மாவட்டம், காட்பாடி மோட்டூர் ஸ்ரீ வேங்கை அம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டத்தின் கீழ் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை சொற்பொழிவு வழங்கும் நிகழ்ச்சி மார்கழி மாதம் முதல் நாளில் மாலை 6:00 மணி அளவில் வைணவ மாமுகில் எல். சடகோபன் குழுவினருடன் திருப்பாவை சொற்பொழிவு நடைபெற்றது .
இந்த சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஆலய அறங்காவலர் குழு தலைவர் சி.நரசிம்மன் தலைமை தாங்கினார் .பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் மண்டல தலைவர் மு.ராஜமாணிக்கம், மண்டல ஒருங்கிணைப்பாளர் எம்.சி.லோகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் முனைவர். செ.நா.ஜனார்த்தனன், குமரன் மருத்துவமனையின் மேலாளர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆலய துணைத் தலைவர் கே.சுப்பிரமணி, நிர்வாகிகள் பிச்சாண்டி, ஜெயராமன் ,டி.உமாகாந்தன், ஜே.சேகர், பார்த்திபன், சாரங்கபாணி ஆகியோர் பேசினர்.
வைணவ மாமுகில் எல். சடகோபன் தலைமையில் குழுவினர் எஸ்.லட்சுமி, கே.மூர்த்தி, எம்.பாபுஜி, டீ.நேதாஜி, ஆர்.சுமதி ஆகியோர் கொண்ட பஜனை குழுவினர் இந்த பக்தி சொற்பொழிவினை வழங்கினர். தலைவர் சி.நரசிம்மன் குழுவினருக்கு ஆலயத்தின் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டினர்.
இன்று தொடங்கி மார்கழி 30 நாட்களும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை இந்த சொற்பொழிவை இடைவிடாது நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.










Leave a Reply