வேலூர்,டிச.10-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் சைஃப் (அனஸ்) கே.எம்.ஜி.போன்ற தோல் தொழிற்சாலைகள் சப்போட்டா தோப்பு, காமராஜர் நகர், திரு.வி.க.நகர், போன்ற பகுதிகளை ஒட்டியுள்ளது. மேற்கண்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கே.எம்.ஜி.மற்றும் சைஃப்(அனஸ்) போன்ற தோல் தொழிற்சாலைகள் சுத்திகரிக்கப்படாத தோல் கழிவுநீரை தினமும் நள்ளிரவு 12 மணிக்கு வெளியேற்றுவதாகவும், இதனால் எங்கள் தூக்கம் தொலைவதாகவும், சீலிங் ஃபேன், டேபிள் ஃபேன் என்று இரண்டு ஃபேன்களை போட்டாலும் கொசுக்கள் எங்களைக் கடித்து குதறுவது மட்டுமல்லாமல், காதுகளின் ஓரம் வந்து கொசுக்கள் ரீங்காரம் இடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கு தூக்கம் தொலைவதாகவும், பெரியவர்கள் நாங்கள் தாங்கிக்கொண்டாலும், பச்சிளம் குழந்தைகள் எப்படி தாங்குவார்கள் என்றும் இப்பகுதியில் வாழும் பெண்கள் தரப்பில் புகாராக கூறப்படுகிறது. இதுகுறித்து பேரணாம்பட்டு தோல் தொழிற்சாலைகளின் டால்கோ பெட்டக் சேர்மேனாக இருக்கின்ற சலீம்பாஷாவே, இதுபோன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டால், அதிகாரிகளுக்கும், இந்த பாவத்தை மூடிமறைக்கும் மனிதர்களுக்கும், பணத்தை கொடுத்து மூடி மறைத்தாலும், எல்லாம் வல்ல இறைவனாக போற்றப்படுகின்ற அல்லா வின் தண்டணையிலிருந்து சைஃப் தோல் தொழிற்சாலையின் முதலாளியும், பேரணாம்பட்டு தோல் தொழிற்சாலைகளின் டால்கோ பெட்டக் சேர்மெனுமான சலிம் பாஷாவும், கே.எம்.ஜி.தொழிற்சாலையின் முதலாளியுமான, கே.எம்.ஜி.நிர்வாகத்தினரும் அல்லாவின் தண்டணையிலிருந்து தப்ப முடியாது என்று பாதிக்கப்பட்ட மக்களின் தரப்பில் கூறப்படுகிறது. ஆனாலும் கூட வேலூர் மாவட்ட மாசுக்கட்டுபாட்டு வாரிய அலுவலர் சந்திரசேகரன் லஞ்ச பணத்திற்கெல்லாம் ஆசைப்படாமல் நேரில் கள ஆய்வு செய்து அது தவறு என தெரியவரும் பட்சத்தில் மேற்கண்ட தோல் தொழிற்சாலைகள் மீது எந்தவித பாராபட்சமும் பாராமல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே, இப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.












Leave a Reply