வேலூர்,டிச.6-
காட்பாடி ரயில் நிலையத்தில் நடைமேடை 5 காட்பாடியில் இருந்து ஆந்திர மாநிலம் செல்ல ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், கொண்டபுரம் மண்டல், பொட்டிப்படு கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் யாதவ் (25) என்ற இளைஞர் நின்றிருந்தார். அப்போது திருப்பதியில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் விரைவு வண்டியில் T.No 22615 ல் தவறுதலாக ஏறிவிட்டார். பின்பு அந்த வண்டியில் இவரது மோட்டோ செல்போன் (மதிப்பு சுமார் ரூ.30.000/-) சீட்டில் ஞாபக மறதியாக வைத்து விட்டு அவசரத்தில் இறங்கி விட்டார்.
இது குறித்து காட்பாடி ரயில்வே காவல் நிலையம் வந்து தகவல் தெரிவித்தார்.
உடனடியாக காவலர்களைக் கொண்டு ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தும், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தும் அந்த செல்போனை மீட்டு உரியவரிடம் மீண்டும் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். செல்போனை பெற்றுக் கொண்ட மகேஷ் யாதவ் காட்பாடி ரயில்வே போலீசாருக்கு நன்றி தெரிவித்து விட்டு நெகிழ்ச்சியுடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.











Leave a Reply