காட்பாடி இரயில் நிலையத்தில் அரக்கோணம் – வேலூர் கன்டோன்மென்ட்பாசஞ்சர் இரயிலில் பயணம் செய்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு

இன்று மாலை அரக்கோணத்திலிருந்து வேலூர் கண்டோன்மென்ட் நோக்கிச் சென்ற பாசஞ்சர் இரயில் காட்பாடி இரயில் நிலையத்தின் 3-வது நடைமேடைக்கு வந்து சேர்ந்தது. அப்போது அந்த இரயிலின் இன்ஜினுக்கு அடுத்துள்ள 3-வது பெட்டியில் முதியவர் ஒருவர் சுயநினைவின்றி இருப்பதாக இரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக இரயில்வே மருத்துவ அதிகாரி அவரைப் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்து காட்பாடி இரயில் நிலைய அதிகாரி அளித்த புகாரின் பேரில், காட்பாடி இரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது உயிரிழந்தவரின் உடல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இவரைப் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் காட்பாடி இரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் (+919442287890) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.