வேலூர்,ஜன.14-
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் மற்றும் காட்பாடி சமூக ஆர்வலர்கள் இணைந்து ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு காட்பாடியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு மதிய சைவ அசைவ உணவு, குடிநீர், டவல் ஆகியவற்றை 100 பேருக்கு வழங்கினர்.
ஆங்கில புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு காட்பாடி ரயில் சந்திப்பு பகுதி சித்தூர் பேருந்து நிலையம், காந்திநகர், ஓடை பிள்ளையார் கோயில், சில்க்மில், விருதம்பட்டு, வேலூர் காந்திசிலை அருகில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒரு வேளை உணவு, குடிநீர், வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் மேலாண்மைக்குழு உறுப்பினர் டி.லிவிங்ஸ்டன் மோசஸ், ஜவகர், பொருளார் வி.பழனி, ஆகியோர் முன்னிலையில் ஒரு வேளை உணவு, குடிநீர், டவல் ஆகியவற்றை 100பேருக்கு வழங்கினர்.














Leave a Reply