தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு வன்டறந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

அறிவியல் கண்காட்சியினை ஊராட்சி மன்ற தலைவர் பி.ராகேஷ் தொடக்கி வைத்து பார்வையிட்டார் பள்ளிக்கு ஏழு மின்விசிறிகளை வழங்கினார்.
காட்பாடி வட்டார கல்வி அலுவலர் எம்.ஜெயராஜ் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் முனைவர் செ. நா.ஜனார்த்தனன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.குப்புராமன் தலைமை தாங்கினார் முன்னதாக பட்டதாரி ஆசிரியை மேரி செல்வராணி வரவேற்றார்
இந்த கண்காட்சியில் பள்ளியில் இருந்த 146 மாணவர்கள் பங்கேற்றனர் 43 தலைப்புகளில் அறிவியல் படைப்புகளை நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் செய்முறை விளக்கம் அளித்தனர் இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் மாணவ மாணவிகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அறிவியல் படைப்புகளை விளக்கினர் ஆசிரியர்கள் பாபு, வி எஸ் குணசீலி சி நிர்மலா தேவி சஞ்சீவியா மற்றும் செல்வி ஆகியோர் செய்திருந்தனர்










Leave a Reply