வேலூர், நவ.14 –
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார். இதற்கு முன்பு வண்டறந்தாங்கல் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய நிவேதா குமாரி தற்போது சேவூர் கிராம நிர்வாக அலுவலராக பணியில் உள்ளார். இவர் சொல்வதைக் கேட்டு லோகு என்கிற லோகநாதன் அதிரடியாக எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி அருகில் உள்ள கரசமங்கலம் கிராமத்திற்கு மாற்றப்பட்டார். இவர் சர்க்கரை வியாதிக்காரர். இவருக்கு பணி ஓய்வு விரைவில் ஏற்பட உள்ளது. இந்நிலையில் இவர் வண்டறந்தாங்கல் கிராம உதவியாளராக மாற்றப்பட்டார். இதையடுத்து கரசமங்கலம் கிராம உதவியாளராக பணியாற்றி வந்த லோகு என்கிற லோகநாதன் எவ்வித உத்தரவுமின்றி அதிரடியாக வண்டறந்தாங்கல் கிராம உதவியாளராக பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன். ஆனால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு லோகு என்கிற லோகநாதனுக்கு எவ்வித உத்தரவும், ஆணையும் கைகளில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாய்மொழி வழியாக சொல்லப்பட்டதால் அவர் வண்டறந்தாங்கலில் கிராம உதவியாளராக தற்போது பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.











Leave a Reply