வேலூர்,நவ.15-
ஜேக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் நடைமுறைபடுத்த கோருதல், 23.08.2010க்கு முன்னதாகப் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு டெட் தேர்விலிருந்து விலக்களித்து ஆசிரியர்களை பாதுகாத்திட வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், பணியாற்றும் ஆசிரியர், பணியாளர் அனைவருக்கும் பணிநிரந்தரம் செய்ய கோருதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி 18.11.2025ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க கோரி பிரச்சார இயக்கம் நான்காவது நாளாக காட்பாடி, காங்கேயநல்லூர், பள்ளிகொண்டா பகுதியில் நடைபெற்றது.
அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், ஜாக்டோ- ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் முகமது ஷாநவாஸ், அக்ரி இராமன், வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ட்டி.டி.ஜோஷி, எம்.ஜெயகாந்தன், ஜி.சீனிவாசன், ஆ.ஜோசப்அன்னையா, அல்போன்ஸ்கிரி, திருக்குமரன், அ.சேகர், எம்.எஸ்.தீனதயாளன் ஆகியோர் முன்னிலையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வட்டார நிர்வாகிகள் உறுப்பு சங்க நிர்வாகிகள் அனைவரும் இப்பிரச்சார இயக்கத்தில் பங்கேற்றனர்.












Leave a Reply