காந்தி வேடமிட்ட முதியவர் பட்டா கேட்டு அமைச்சர்களிடம் மனு அளித்த பரிதாபம்!

வேலூர், அக். 9-
பத்திரபதிவுத்துறையில் இணையதள வசதி 2. 0 – 3.0 வாக மாற்றுவதால் சில சிரமங்கள் இருக்கிறது. ஒரு மாதகாலத்தில் அறிவிப்பு வரும் – நில வழிகாட்டு மதிப்பீடுகள் மாற்றும் திட்டமில்லை. -பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி காட்பாடியில் பேட்டி. காந்தி வேடமிட்ட முதியவர் பட்டா கேட்டு அமைச்சர்களிடம் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்மாவட்டம், காட்பாடியில் ரூ.1.87 லட்சம் மதிப்பில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா பத்திரபதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதனை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்பு லெட்சுமி வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஷில்பா பிரபாகர்,பத்திரபதிவுத்துறை தலைவர் பொன் ராஜ் ஆலிவர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்

இதில் திரளான பொது மக்கள் கலந்துகொண்டனர் விழா நடந்து கொண்டிருந்த போது காந்தி வேடமிட்ட ஒருவர் வீட்டுமனைப்பட்டா கோரி அமைச்சர் துரைமுருகனிடம் மனு அளித்தார்.

இதனால் எல்லாருடைய பார்வையும் காந்தியே வந்து மனு அளித்ததால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது நிறைவு பெற்றவுடன் கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் தோரணம் கட்டியிருந்த கரும்பு வாழை இளநீர் ஆகியவைகள் பிடுங்கி அள்ளி சென்றனர்.

பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில் பத்திரபதிவுத்துறை இணையதள முடக்கத்தால் நிரந்தரமாக பிரச்சணை இல்லை 2.0 -இணையம் 3. 0 மாறும் வெகுவிரைவில் பத்திரபதிவு கூடியுள்ளது விரைவில் ஒரு மாதத்தில் 3.0 அறிமுகப்படுத்தவுள்ளோம். ் நிலத்தின் வழிகாட்டுதல் மதிப்பீடுகள் மாற்றியமைக்கபடமாட்டாது என்று கூறினார்.