வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில காலியாக உள்ள 2 அலுவலக உதவியாளர்கள், ஒரு ஓட்டுநர் வேலைகளுக்கு நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர்காணலுக்கு ஒன்றியக் குழு பெருந்தலைவர் ஜெ.சித்ரா தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் எம்.கே.கெளரி, வட்டார வளர்ச்சி அலுவலர் கு.பாரி, ஒன்றியக் குழு துணை பெருந்தலைவர் டி.லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நேர்காணலில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் சாத்கர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.சங்கீதப்ரியா சீனிவாசன், சாத்கர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கே.நீலா கபில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமி, உலகநாதன் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.











Leave a Reply