பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலகத்தை

செய்யாறு சப் – கலெக்டர் அம்பிகா ஜெயின் திறந்து வைத்தார் !
செய்யாறு, டிச. 21 –
செய்யாறில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தின் புதிய அலுவலகத்தை, செய்யார் சப் – கலெக்டர் அம்பிகா ஜெயின் நேற்று திறந்து வைத்தார்.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் சார்பில் தமிழ்நாடு சமூக நல மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலமாக செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையம் ( பெண்களுக்கான ) புதிய அலுவலகம் செய்யாறில் உள்ள பாலிடெக்னிக் கல்வி நிறுவன வளாகத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த அலுவலகத்தின் திறப்பு நேற்று நடந்தது. ஏற்கனவே தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் இதுபோன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் தொகை அதிகமாகவும், மாவட்டம் பெரியதாகவும் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதல் ஒருங்கிணைந்த சேவை மையம் செய்யாறில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான திறப்பு விழாவில் செய்யார் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, சப் – கலெக்டர் அம்பிகா ஜெயின், செய்யாறு நீதிமன்ற சார்பு நீதிபதி நா. சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்படும் மகளிர் இங்கு வந்து புகார் அளிக்கலாம். திருவண்ணாமலை மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி, திருவண்ணாமலை மாவட்ட குடும்ப வன்கொடுமை தடுப்புச் சட்ட பாதுகாவலர் கோமதி, ( சி.டபியூ.சி., ) கமிட்டி உறுப்பினர் எலிசபெத் மற்றும் மாவட்ட தொண்டு நிறுவன செயலாளர் லதாஸ்ரீதர், இயக்குனர் ஆர்.
ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்து உடனிருந்தனர்.
பட விளக்கம்:
செய்யாறில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்வியில் நிறுவன வளாகத்தில், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலகத்தை, செய்யார் சப் – கலெக்டர் நேற்று குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.










Leave a Reply