செய்யாறில் உள்ள

கிராமங்களில் ‘குழாயிகள்’ மூலம்

வீடுகளுக்கான இயற்கை கேஸ் அறிமுகம் !

செய்யாறு, டிச 27 –
செய்யாறில் உள்ள கிராமப்புறங்களில் ‘குழாயிகள்’ மூலம் வீடுகளுக்கு கேஸ் இணைப்பு வழங்கும் பணிகள் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் செல்லபெரும்புலிமேடு கிராமத்தில், ( பி.என்.ஜி.ஆர்.பி., )
விதிமுறைகளின்படி மெகா சிட்டி கேஸ் வினியோகிஸ்தர் தனியார் நிறுவனம் தனது முதல் முதலில் வீடுகளுக்கு குழாயிகள் மூலம் இயற்கை எரிவாயு டி.பி.எஸ்.ஜி., கேஸ் இணைப்பை வழங்கி உள்ளது. இந்த திட்டத்தை வெம்பாக்கம் ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவர் நாகம்மாள் குப்பன் வீட்டில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மெகா கேஸ் நிறுவனத்தின் திருவண்ணாமலை மாவட்ட மேலாளர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தின் மூலம் கிராம மக்கள் இந்த ‘குழாய் இயற்கை எரிவாய்வை’ எளிதாக பயன்படுத்தும் முறையும், இதன் நன்மைகளையும் செயல் முறைகள் மூலம் நிறுவத்தினர் எடுத்து கூறினர்.
வணிகங்களிலும் இந்த இயற்கை கேசை பயமின்றி பயன்படுத்தலாம். இந்த திட்டம் செய்யார் சிப்காட் தொழிட்பூங்காவை சுற்றியுள்ள கிராமங்களும் படிப்படியாக கொண்டுவரப்படும் என, நிறுவனத்தின் மேலாளர் செ.வசந்தராமன் தெரிவித்துள்ளார்.

பட விளக்கம்:

செய்யார் அடுத்த செல்லப்பெரும் புலிமேடு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், ஊழியர்களால் ‘குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு கேஸ்’ பொருத்தப்படும் பணியை படத்தில் காணலாம்.