செய்யாறு, டிச. 7 –
செய்யாற்றில் அம்பேத்கரின் 69வது நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் ஞானப்பிரகாசம் தலைமையில், பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்தியாவின் சட்டமாமேதை டாக்டர் அம்பேத்கரின் 69வது நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் குணசேகரன் உத்தரவின் பேரில், செய்யாறில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும், வெம்பாக்கம் மற்றும் செய்யாறங்கரையை ஒட்டி நிறுவப்பட்டுள்ள அம்பேத்கரின் சிலைகளுக்கும் மாவட்ட தலைவர் ஞானப்பிரகாசம் தலைமையில் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அம்பேத்கரின் புகழ் குறித்து சிறிது நேரம் பேசினர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ராந்தம் சேகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாவட்ட அமைப்பாளர் மோரணம் பாண்டியன், மாவட்ட செயலாளர் விநாயகம், பொருளாளர் வேலாயுதம், மாவட்ட துணைத் தலைவர் பத்மநாபன், மாவட்ட இளைஞரணி தலைவர் ரமேஷ், ஒன்றிய தலைவர் எம்.ரமேஷ், செய்யார் நகர தலைவர் முத்துசாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.













Leave a Reply