விரிஞ்சிபுரம் ஸ்ரீ மார்க்கபந்தீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் தங்கும் விடுதிக்கு அடிக்கல் நாட்டு விழா!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி, கிழக்கு ஒன்றியம், விரிஞ்சிபுரம் ஸ்ரீ மார்க்கபந்தீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
விழாவில் திமுக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஏ. பி. நந்தகுமார் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தனது திருக்கரங்களால் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.குமரபாண்டியன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் மகேந்திரன்,
செயல் அலுவலர் பிரியா, ஒன்றிய கவுன்சிலர் சசிகலா சுப்புராயன்,
விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவி குணசுந்தரி பாலு மற்றும் கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.